காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு கிழக்கு முகமாகக் காட்சி தருகிறார். இப்பெருமானின் திருமார்பில் ருத்ராட்சமணி மாலைகளும், திருக்கரங்களில் நாகாபரணமும், திருச்செவிகளில் குண்டலங்களுடன், சடைமுடியும் கொண்டு காட்சி தருகிறார்.
கோயிலுக்கு வெளியே இந்திர தீர்த்தம் என்னும் திருக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பரம்பரை அறங்காவலர்கள் இக்கோயிலை நிர்வாகம் செய்து வருகின்றனர். இக்கோயிலுக்கு அருகில் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய அற்புதமான கோயில் உள்ளது.
|